×

மாதவன் படத்தில் நடிக்கிறார் ஷாருக்கான்

மாதவன் நடித்து, முதல்முறையாக இயக்கும் படம் ராக்கெட்ரி - தி நம்பி எஃபெக்ட். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் கதையாக இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்கி வந்தார். திடீரென அவர் படத்திலிருந்து விலகினார். இதையடுத்து இதில் ஹீரோவாக நம்பி நாராயணன் கேரக்டரில் நடித்து வந்த மாதவனே, இயக்குனர் பொறுப்பை ஏற்றார். இப்போது 4 மொழியிலும் அவரே படத்தை இயக்கி வருகிறார். படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். இதில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஷாருக்கானிடம் கால்ஷீட் கேட்டு வந்தார் மாதவன். இப்போது அவர் நடிக்க சம்மதித்துள்ளார். இந்தி பதிப்பில் ஷாருக்கானும் தமிழில் அந்த வேடத்தில் சூர்யாவும் நடிக்க உள்ளனர். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பார் என்றும் மலையாளத்தில் பிருத்விராஜ் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags : Shah Rukh ,Madhavan ,
× RELATED காதலிக்க வலியுறுத்தி பெண்ணின் வீடு புகுந்து ரகளை: வாலிபர் கைது