×

பாலிவுட் ஹீரோக்களின் பெண் மேனேஜர் 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

பாலிவுட் நடிகர்களின் பெண் மேனேஜர் திஷா சலியன், 14வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். கிரிக்கெட் வீரர் டோனி வாழ்க்கை வரலாறு டோனி என்கிற பெயரில் இந்தியில் படமாக உருவானது. இதில் ஹீரோவாக நடித்தவர் சுஷாந்த் சிங். இவரது மேனேஜர் திஷா சலியன். இவர் தவிர நடிகர்கள் வருண் சர்மா, சூரஜ் பன்ச்சோலி, நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் மேனேஜராக திஷா சலியன் இருந்துள்ளார். மும்பையிலுள்ள மலாட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இவர் தங்கியிருந்தார். அங்கு திஷாவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட வாலிபரும் உடன் இருந்துள்ளார். நேற்றுமுன்தினம், திடீரென அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடியிலிருந்து திஷா குதித்தார். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

Tags : Woman manager ,suicide ,heroes ,
× RELATED பிரைம் வாலிபால் லீக் தொடர் இறுதி...