×

பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டார் குஷ்பு

சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க செயலாளராக இருக்கிறார் நடிகை குஷ்பு. தனது சங்க உறுப்பினர்களுக்கு அவர் அனுப்பிய ஆடியோ மேசேஜில், ‘பத்திரிகைகாரங்களுக்கு கொரோனா தவிர வேறு செய்தி கிடையாது. அதனால் சின்னத்திரை ஷூட்டிங் நடக்கிற இடத்துக்கு வந்துட்டு, ஏதாவது கிழிக்கிறதுக்குன்னே காத்திருப்பாங்க’ என பத்திரிகையாளர்களை விமர்சித்து இருந்தார். இந்நிலையில் டிவிட்டரில் குஷ்பு கூறியிருப்பதாவது: நான் ஊடகங்களைப் பற்றிப் பேசியதாக ஒரு வாய்ஸ் மெசேஜ் சுற்றி வருகிறது. அது எடிட் செய்யப்பட்டது. அது எங்கள் தயாரிப்பாளர் குழுவிலிருந்து சென்றிருக்கிறது. எங்களுக்கு மத்தியில் இப்படி மலிவாக யோசிப்பவர்கள் இருக்கிறார்கள் என்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். 

எனது நோக்கம் தெளிவானது, ஊடகங்களை அவமதிக்க வேண்டும் என்ற அர்த்தத்தில் பேசவில்லை. அது நண்பர்களிடம் நாம் பேசும் தொனிதான். ஊடகங்கள் மீதான என் மதிப்பு அனைவருக்கும் தெரியும். திரைத்துறையில் இந்த 34 வருடங்களில் ஒரு முறை கூட நான் அவர்களிடமோ, அவர்களைப் பற்றியோ மரியாதைக் குறைவாகப் பேசுவதை அவர்கள் பார்த்திருக்கவோ, கேட்டிருக்கவோ மாட்டார்கள். அந்த வாய்ஸ் மெசேஜ் அரைகுறையாக உள்ளது. ஆனால் உங்களில் யாரையாவது காயப்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குஷ்பு கூறியுள்ளார்.

Tags : Khushboo ,
× RELATED தலைமைக்கு தலையாட்டும் தொண்டனாக ஒருபோதும் இருக்க மாட்டேன்: குஷ்பு ட்வீட்