×

கொரோனா வைரஸ் பீதியால் ஹாலிவுட் படங்களில் இனி கிராபிக்சில் படுக்கையறை காட்சி

ஹாலிவுட் திரைப்படங்களில் படுக்கை அறை காட்சிகள், லிப்லாக் முத்தக் காட்சிகள் சர்வ சாதாரணமாக இடம் பெறும். அந்த படங்கள், இந்தியாவில் தணிக்கை செய்யப்படும்போது இங்குள்ள விதிமுறைகளின்படி அவை நீக்கபட்டோ, குறைக்கப்பட்டோ அனுமதிக்கப்படும். தற்போது கொரோனா வைரஸ் பிரச்னை காரணமாக இனி சில காலத்திற்கு படுக்கை அறை காட்சிகள், நெருக்கமான காட்சிகள் படமாக்குவதில் பெரும் சிக்கல்கள் இருக்கிறது. நடிகர், நடிகைகள் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க மறுப்பார்கள். இதனால் இனி படத்திற்கு கண்டிப்பாக தேவைப்படும் படுக்கையறைகாட்சிகள், முத்தக் காட்சிகளை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் படமாக்க இருக்கிறார்கள். 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில கவர்னர் நியூசோம் அந்த மாநிலத்தில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நெருக்கமான காட்சிகளை படமாக்குவதை தவிர்க்கவும், அல்லது அந்த காட்சிகளை படமாக்க மாற்று வழிகளை பின்பற்றவும் கூறியிருந்தார். அதன்படி ஹாலிவுட் திரைப்பட தொழில்நுட்ப சபை கிராபிக்ஸ் மூலம் இனி பாலியில் தொடர்பான காட்சிகள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

Tags : corona virus panic ,
× RELATED கொரோனா வைரஸ் பீதி மாவட்ட எல்லையில் பாதுகாப்பு பணி தீவிரம்