×

சம்பளம் அதிகம் கேட்கிறேனா: பூஜா ஹெக்டே கோபம்

இந்தி, தெலுங்கு சினிமாவில் பிசியாக இருக்கிறார் பூஜா ஹெக்டே. இவரை தமிழுக்கு அழைத்து வரும் முயற்சிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் தனது மார்க்கெட் சூடு பிடித்ததால் அதிக சம்பளம் கேட்பதாக பூஜா ஹெக்டே மீது சினிமா வட்டாரத்தில் கிசு கிசு கிளம்பியுள்ளது. இது பற்றி பூஜா கூறும்போது, ‘இது முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்து என்னை பிரச்னையில் சிக்க வைக்கும் முயற்சி. ஒரு பட வாய்ப்பு வரும்போது, அந்த படத்தின் கதை, அதில் எனது கேரக்டர், படம் பேசப்போகும் கருத்து இதைத்தான் நான் பார்க்கிறேன். அதன் பிறகுதான் தயாரிப்பு நிறுவனம், பட இயக்குனர், ஹீரோ ஆகியோர் யார் என்பதை தெரிந்துகொள்கிறேன். அதன் பிறகு மார்க்கெட்டில் எனக்குள்ள வேல்யூவை வைத்தே சம்பளம் பெறுகிறேன். எப்போதும் அதிக சம்பளம் கேட்டு தயாரிப்பாளருக்கு நெருக்கடி கொடுத்தது கிடையாது. இதுவரை நான் நடித்த படங்களின் தயாரிப்பாளர்களையே கேட்கலாம். என்னை பற்றி வீண் வதந்தி பரப்புகிறவர்கள் அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.

Tags :
× RELATED காஜல் சம்பள ரகசியம்