×

ராஜமவுலியின் படத்தில் ஸ்ரேயா

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ஆர்ஆர்ஆர் படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் நடிக்கிறார்கள். இதில் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கிறார். ஹீரோயினாக அலியா பட் நடிக்க உள்ளார். படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இந்நிலையில் இதில் அஜய் தேவ்கனின் மனைவியாக நடிக்க ஸ்ரேயா ஒப்பந்தமாகியுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த ஆண்ட்ரெ கோஸ்ச்சீவை திருமணம் செய்துகொண்டு, ஸ்பெயினில் செட்டில் ஆனார் ஸ்ரேயா. திருமணத்துக்கு பிறகும் அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துகிறார். தமிழில் விமல் ஜோடியாக சண்டக்காரி படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராஜமவுலி கேட்டதும் நடிக்க ஒப்புக்கொண்டார் ஸ்ரேயா. ஊரடங்குக்கு பிறகு படப்பிடிப்புகள் தொடங்கியதும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர். படத்தில் அவர் கவுரவ வேடத்திலேயே நடிப்பார் என பட வட்டாரம் தெரிவித்துள்ளது.

Tags : Shreya ,Rajamouli ,
× RELATED ராஜமவுலிக்கு பரிசு கொடுத்த 83 வயது ஜப்பான் பாட்டி