×

திருப்போரூர் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 பேருக்கு தலா 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் கோயில் குளத்தில் மூழ்கி முகேஷ், விஜி மற்றும் உதயகுமார் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் கோவில் குளத்தில் குளித்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ளது சிதம்பரம் சுவாமி மடக்குளம் கோவில். இந்தக் கோவிலுக்குச் சொந்தமான குளம் ஒன்று உள்ளது.  தற்போது சபரிமலை சீசன் என்பதால் இந்தக் குளத்தில் காலை மற்றும் மாலை வேளைகளில் சபரிமலைக்குச் செல்வோர் குளிப்பது வழக்கம். இந்த நிலையில் கேளம்பாக்கம் அருகேயுள்ள சதன் குப்பம் பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் குளிப்பதற்காகக் குளத்தில் இறங்கியுள்ளனர். மூவருக்கும் நீச்சல் தெரியாத நிலையிலும் குளத்தில் இறங்கி குளிக்க முற்பட்டுள்ளனர். குளத்தில் ஆழம் அதிகம் இருந்ததால் மூழ்கி இறந்துள்ளனர்.நீரில் மூழ்கி உயிரிழந்த செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் பேரூராட்சியிலுள்ள கன்னகப்பட்டு குளத்தில் எதிர்பாராத விதமாக மூழ்கி முருகேஷ், த/பெ,ரவி, உதயகுமார், த/பெ.ராஜு மற்றும் விஜய், த/பெ.முனியன் ஆகிய மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.இச்சம்பவத்தில், உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதலவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். …

The post திருப்போரூர் கோயில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 பேருக்கு தலா 2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruporur temple ,Chennai ,Mukesh ,Viji ,Udayakumar ,Tiruporur temple pond ,Chengalpattu ,
× RELATED சென்னை தேனாம்பேட்டையில் உணவு...