×

ஏப்ரான் எனும் ஏக தலைவன்

செஃப்களின் நண்பன்உணவில் பல்வேறு புதுமைகளை ஏற்படுத்தியவர்கள் பிரெஞ்சுகாரர்களே. நாம் சாப்பிடும் உணவை முறைபடுத்தி செவன் கோர்ஸ் மெனு, லெவன் கோர்ஸ் மெனு என வகைபடுத்தினார்கள். உலகளவில் பிரெஞ்சுக்காரர்கள்தான் உணவை ரசித்து சமைக்கக் கூடியவர்கள். அதை கொண்டாட்டமாகவும் உண்ணக் கூடியவர்கள். இவர்களே சூப்பில் தொடங்கி இனிப்பில் முடிக்க வேண்டும் என சாப்பாட்டுக்கான வரையறையை வகுத்தார்கள்.நடிகர்கள், விளையாட்டு வீரர்களுக்கு சமமாக சமையல் கலைஞர்களை மதித்து மரியாதை செய்யும் வழக்கமும் இவர்களிடம் உண்டு. திறமையான செஃப் ஏர்போட்டிலோ பொது இடத்தில் என எங்கு சென்றாலும் அவரை சூழ்ந்துகொண்டு செல்ஃபி எடுத்துக்கொள்வது பிரெஞ்சு மக்களின் மரபு!  சீஸ், சாஸ்கள், டெஸர்ட், காய்கறி, இறைச்சி என ரகம் பிரித்து ஸ்பெசலிஸ்ட்  செஃப்கள் இருப்பார்கள். அப்படி அவர்களிடம் இருந்து இன்று நம் வீட்டில் சமைக்கும் அம்மா அக்கா என்று அனைவரிடமும் ‘ஏப்ரான்’ வந்துவிட்டது. இடுப்பில் இருந்து கழுத்தோடு சேர்த்து கட்டிக் கொண்டு சமைக்கின்றோம். நெருப்பு நம் மேல் பட்டுவிடாமல் இருக்க, சூடான குழம்பு. வறுவல், எண்ணெய்த் துளிகள் உடலில் தெறித்து விடாமல் பாதுகாக்கின்றது இந்த ‘ஏப்ரான்’ ஆரம்ப காலம் முதலே விருந்தோம்பலின் அடையாளமாக  ஏப்ரான் உள்ளது.  17 ஆம்நூற்றாண்டில் பிரஞ்சு வார்த்தையில் இருந்து வந்ததுதான் ‘ஏப்ரான்’. 18 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆங்கிலேயர்கள், அமெரிக்கர்கள். என மெல்ல எல்லா நாடுகளும் சென்றது. தவிர அரண்மனைகளில் பணிபுரியும் குக், பெயிண்டர், வேலையாட்கள் என அனைவரும் பயன்படுத்த தொடங்கினர். துவக்கத்தில் முழு உடலையும் மறைக்கும் விதமாகவே இருந்தது. பிறகு வேலைகளுக்கு ஏற்றபடி பார்பிக்யூ முறையில் மாற்றம் பெற்று ஏப்ரான்கள் உடலின் மேற்பகுதியை மறைக்கும் படியும் மாறியது, மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்கள் ஏப்ரானை இடுப்பில் மட்டுமே கட்டும் விதமாக தயார் செய்துகொண்டார். 1950க்கு பிறகு குக், செஃப் மற்றும் வீடுகளில் சமைக்கும் இல்லத்தரசிகளிடம் என அனைவரிடமும் சகஜமாக புழங்கும் பொருளாக மாறியது ஏப்ரான். பொதுவாக பருத்தி நூலில் தயாரிக்கப்படும் ஏப்ரான்களை செஃப்கள், பயன்படுத்துகின்றார்கள். ரப்பர், லெதரில் தயாரிக்கப்படும் ஏப்ரான்கள் இறைச்சிக் கூடங்கள், இரும்பு பட்டரை என நெருப்பு அதிகம் புழங்கும் இடங்களில் பெரும் பாதுகாவலனாக இருந்து வருகின்றது. தற்போது நட்சத்திர ஹோட்டல்கள். மருத்துவமனைகள். என பாதுகாப்பு சார்ந்த எல்லா துறைகளிலும் ஏப்ரான்தான் கேடயம்.– சுரேந்திரன்

The post ஏப்ரான் எனும் ஏக தலைவன் appeared first on Dinakaran.

Tags : Abron ,
× RELATED ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது: அதிமுக கடும் கண்டனம்