×

மலையாள நடிகர்களின் சம்பளம் எவ்வளவு?

சினிமா என்றாலே அதில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்கள் கோடிகளில் புரள்கிறார்கள் என்ற எண்ணம் பாமர ரசிகன் முதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு படவுலகிலும் ரிலீசாகும் படங்கள் வசூலிக்கும் தொகையை பொறுத்து ஹீரோ, ஹீரோயின்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. மலையாள படவுலகம் சிறியது என்பதால், அங்குள்ள முன்னணி நடிகர்களுக்கு கூட சில கோடி ரூபாய்களில் மட்டுமே சம்பளம் கொடுக்கப்படுகிறது என்ற விஷயம், தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அதாவது, கோலிவுட்டில் உள்ள முன்னணி இளம் ஹீரோக்கள் அல்லது காமெடி நடிகர் வாங்கும் சம்பளம் கூட மலையாள நடிகர்களுக்கு கிடைப்பதில்லை என்பது ஆச்சரியமான விஷயமாக இருக்கிறது. 

ஒரு படத்தில் நடிக்க மோகன்லாலுக்கு 5 முதல் 8 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. மம்மூட்டிக்கு 4 முதல் 5 கோடி வரையிலும், பிருத்விராஜுக்கு 2 முதல் 3 கோடி வரையிலும், நிவின் பாலிக்கு 1 முதல் 2 கோடி வரையிலும், துல்கர் சல்மானுக்கு 80 லட்சம் முதல் 2 கோடி ரூபாய் வரையிலும் சம்பளம் கொடுக்கப்படுவதாக, மல்லுவுட் வட்டாரத்தில் சொல்கிறார்கள்.

Tags : actors ,
× RELATED நடிகர் சங்கத்துக்கு நடிகர் விஜய் ரூ.1 கோடி நிதி