×

போலி செய்தி பரப்புவதா?: அக்‌ஷய்குமார் ஆவேசம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார், டெல்லியில் இருக்கும் தனது சகோதரி மற்றும் அவரது இரு குழந்தைகளை மும்பைக்கு அழைத்து வர தனி விமானம் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் பரவியது. கொரோனா ஊரடங்கு நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் காலில் செருப்பு கூட இல்லாமல் பல மைல் தூரம் நடந்து செல்லும் சூழ்நிலையில், இரண்டு பேருக்காக தனி விமானமா என்று பலர் விமர்சனம் செய்தனர். இதுகுறித்து தனது டிவிட்டரில் அக்‌ஷய் குமார் ஆவசேத்துடன் அளித்துள்ள விளக்கம்: தங்கை மற்றும் அவரது குழந்தைகளுக்காக நான் தனி விமானம் ஏற்பாடு செய்திருப்பதாக வந்திருக்கும் செய்தி தவறு. காரணம், அவருக்கு இரு குழந்தைகள் கிடையாது. ஒரு குழந்தை மட்டுமே. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் எனது தங்கை எங்கும் பயணம் செய்யவில்லை. இதுபோல் ஒரு போலி செய்தி பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும்.

Tags : Akshay Kumar ,
× RELATED மாநகர செய்தி துளிகள்...