ஊரடங்கில் மியா ஜார்ஜுக்கு திடீர் நிச்சயதார்த்தம்

தமிழில் அமர காவியம், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து ஆகிய படங்களில் நடித்தவர், மியா ஜார்ஜ். தற்போது விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். ஏராளமான மலையாள படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், மியா ஜார்ஜுக்கு விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. அவரது பெற்றோர் அவருக்கு அஸ்வின் என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில், மணமகன் அஸ்வின் வீட்டில் நெருக்கமான உறவினர்கள் மட்டும் கலந்துகொள்ள நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்துள்ளது. திருமணத்தை செப்டம்பர் மாதம் நடத்த முடிவு செய்துள்ளனர். மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்வதாகவும், திருமணம் முடிந்த  பின்பு கையில் இருக்கும் படத்தை முடித்து கொடுத்துவிட்டு மியா வெளிநாடு செல்ல வசதியாக திருமண நிச்சயதார்த்தத்தை அவசரமாக முடித்ததாகவும், இன்னும் சில நாட்களில் பதிவு திருமணம் நடக்க இருப்பதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>