×

தாய் இறந்தது தெரியாமல் எழுப்பிய குழந்தையை தத்தெடுத்தார் ஷாருக்கான்

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, புலம்பெயர்ந்து கூலி வேலை செய்த மக்கள்  சாரை சாரையாக நடந்தும், கிடைத்த லாரிகளில் ஏறியும் சொந்த ஊருக்கு திரும்பினார்கள். கடைசி நேரத்தில் அரசு ஏற்பாடு செய்த ரெயிலிலும் ஏறி சென்றார்கள். அப்படி சென்றவர்களில் ஒரு குழந்தையுடன் சென்ற தாய், பசியால் பீகாரின் முசார்பூர் ரெயில் நிலையத்திலுள்ள பிளாட்பாரத்தில் இறந்தார். தாய் இறந்ததை அறியாத அந்த குழந்தை, தாயை எழுப்பியவாறு அங்கும் இங்கும் தவித்தது. அந்த வீடியோ இந்தியா முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த குழந்தையை தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக் கான், தனது மீர் அறக்கட்டளையின் சார்பில் தத்தெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு தேவையான அத்தனை செலவையும் அறக்கட்டளை ஏற்கும் என்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

அந்த குழந்தை எங்களிடம் வந்து சேர உதவிய அனைவருக்கும் மீர் அறக்கட்டளை நன்றி தெரிவிக்கிறது. தாயை எழுப்ப முயற்சிக்கும் அந்த குழந்தையின் வீடியோ எல்லோருடைய இதயத்தையும் துடிக்க வைத்தது. அனைவரையும் அது தொந்தரவு செய்தது. நாங்கள் இப்போது அந்த குழந்தைக்கு ஆதரவளித்து வருகிறோம். அக்குழந்தை தன் தாத்தாவின் பராமரிப்பில் இருக்கிறது. எங்கள் கண்காணிப்பில் இருக்கிறது.

Tags : Shahrukh Khan ,
× RELATED சிறுமியை எரித்து கொன்றவர்களுக்கு...