×

டிக்கெட் விலையை குறைக்க தியேட்டர் உரிமையாளர்கள் முடிவு

தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும்போது டிக்கெட் விலையை குறைக்க தியேட்டர் அதிபர்கள் முடிவு செய்துள்ளார்கள். இது குறித்து தமிழ்நாடு தியேட்டர் அதிபர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: திரையரங்குகள் மூடப்பட்ட பிறகு 50 ஆயிரம் தொழிலாளர்கள் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பிற தொழில்களுக்கு விதிமுறைகளுடன் அனுமதி வழங்கியது போன்று திரையரங்கு தொழிலை மீண்டும் தொடங்க மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும். திரையரங்கு உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வெளியிட வேண்டும். அரசு வெளியிடும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்த குறைந்தது இரண்டு வார கால அவகாசம் தேவைப்படும்.

இந்தியாவில் சாமானிய மக்களின் ஒரே பொழுதுபோக்கு திரையரங்குகளில் திரைப்படங்களை கண்டுகளிப்பது. சமூக இடைவெளியின் அடிப்படையில் குறைந்த எண்ணிக்கையிலான டிக்கெட்டுகள் விற்பனை செய்து பார்வையாளர்களை அனுமதிக்க முடியும். தற்போது நடைமுறையில் உள்ள உள்ளாட்சி அமைப்பு களுக்கான கேளிக்கை வரி சதவிகிதத்தை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். இதை ரத்து செய்வதன் மூலம் திரையரங்கு டிக்கெட் கட்டணம் குறையும். அதிக எண்ணிக்கையில் மக்கள் குடும்பமாக படம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். தனி திரையரங்குகளுக்கான ஜிஎஸ்டி வரியை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தற்போது 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் டிக்கெட்டை 84 ரூபாய்க்கு விற்கமுடியும். 

Tags : Theater owners ,
× RELATED பிப்.22 முதல் கேரள தியேட்டர்கள்...