×

வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கும் அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 2வது நாளாக ஆர்வத்துடன் வந்த பெண்கள்

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி யில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் கடந்த 15ம் தேதி முதல் ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் வரை ஆண்களுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நடந்தது. இதில் உடற்தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் அடுத்தக்கட்ட தேர்வுக்கு தேர்வாகி உள்ளனர்.இதையடுத்து நேற்று முதல் பெண் விண்ணப்பதாரர்களுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் தொடங்கியது. இதில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா ஆகிய 3 மாநிலங்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் பங்கேற்று வருகின்றனர். முதல் நாளாக நேற்று நடந்த முகாமில் பங்கேற்க நேற்று முன்தினம் காலை முதலே 3 மாநிலங்களில் இருந்து ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு உயரம் அளவீடு செய்யப்பட்டது. பின்னர் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஓட்டம் விடப்பட்டு நேற்று முழுவதும் பல்வேறு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டது.இதற்கிடையில் 2வது நாளாக இன்று நடக்கும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்க, நேற்று காலை முதலே ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் வர தொடங்கினர். அவர்களுக்கு நேற்று நள்ளிரவு 12 மணிக்கு உயரம் அளவீடு செய்யப்பட்டு மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து ஓட்டம் விடப்பட்டு, இன்று உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்படுகிறது.பெண்களுக்கான ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் நாளை(29ம் தேதி) கடைசி நாளாக நடக்கிறது. இதில் பங்கேற்க வரும் பெண்களுக்கு இன்று நள்ளிரவு 12 மணிக்கு உயரம் அளவீடு செய்யப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்….

The post வேலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடக்கும் அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமில் 2வது நாளாக ஆர்வத்துடன் வந்த பெண்கள் appeared first on Dinakaran.

Tags : Agnibad Army ,Recruitment ,Camp ,Vellore District Sports Ground ,Vellore ,Gadbadi, Vellore district ,Agnipath army ,Vellore district ,Dinakaran ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு