×

போதிய வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் கல்விகற்கும் மாணவர்கள்-புதிய வகுப்பறை கட்டித்தர வலியுறுத்தல்

வடலூர் : குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழூர் ஊராட்சியில் போதிய வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் மாணவர்கள் கல்வி பயின்று வருவதால் பெற்றோர்கள் வேதனை அடைந்துள்ளனர். கீழூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி இரண்டு ஆசிரியர்களை கொண்டு இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்தாண்டு பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளதாக கூறி, இரண்டு பள்ளி கட்டிடத்தில் ஒன்று அரசு சார்பில் இடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் இடிக்கப்பட்ட பள்ளி கட்டிடத்திற்கு மாற்றாக புதிய பள்ளி கட்டிடம் கட்ட எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.மேலும் போதிய பள்ளி கட்டிடம் இல்லாததாலும், வகுப்பறைகள் இல்லாததாலும் வெயில், மழையில் தங்களது பிள்ளைகள் மரத்தடியில் படித்து வருகின்றனர் என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, விரைவாக பள்ளி கட்டிடத்தை கட்டி கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post போதிய வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் கல்விகற்கும் மாணவர்கள்-புதிய வகுப்பறை கட்டித்தர வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Keezur ,Kurinchipadi ,Dinakaran ,
× RELATED குறிஞ்சிப்பாடி அருகே பரபரப்பு...