×

அமெரிக்காவில் நிறவெறி பிரியங்கா சோப்ரா ஆவேசம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வரும் நிலையில் கூட, அந்த நாட்டில் நிறவெறியும் ஆடிக் கொண்டு இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின இளைஞரை ஒரு போலீஸ் அதிகாரி தனது காலால் அழுத்திக் கொன்றார். அதை மற்ற அதிகாரிகள் வேடிக்கை பார்த்தனர். இந்த வீடியோ உலகம் முழுக்க வைரலாக பரவியது. ஹாலிவுட் நட்சத்திரங்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அமெரிக்காவில் வசித்து வரும் பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நிறவெறிக்காக இனி ஒரு உயிர் கூட போகக்கூடாது என்று ஆவேசமாக கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது: இப்போது நாம் செய்ய வேண்டிய காரியங்கள் பல இருக்கிறது. 

அறிவாளிகள் என நினைத்துக் கொண்டிருக்கும் பலபேரும் இந்த விவகாரத்தில் கற்க வேண்டியது நிறையவே இருக்கிறது. நிறவெறி காரணமாக இனிமேல் ஒரு உயிரும் போகக்கூடாது. கழுத்து நெரிக்கப்பட்டு ஜார்ஜ் துடிதுடித்து இறந்தபோது, அதை தடுக்காமல் அருகில் நின்று வேடிக்கை பார்த்த போலீசார் மற்றும் அந்த கொடூரமான செயலை செய்த  போலீஸ்காரருக்கும் உரிய தண்டனை கிடைக்கும்வரை இந்த போராட்டம் நிற்கக்கூடாது.என்ற பிரியங்கா சோப்ரா, ஜார்ஜ் மரணத்துக்கு எதிரான கையெழுத்து இயக்கத்திலும் இணைந்துள்ளார்.

Tags : racist ,Priyanka Chopra ,America ,
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல்...