×

பொன்மகள் வந்தாள் போலி வெப்சைட்டில் வெளியானது

ஜோதிகா நடித்துள்ள படம், பொன்மகள் வந்தாள். இதனை சூர்யா தயாரித்துள்ளார். கே.பாக்யராஜ், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜே.ஜே.பிரடெரிக் என்பவர் இயக்கி உள்ளார். இந்த படம் நேற்று தியேட்டர் அதிபர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி ஓடிடி தளத்தில் வெளியானது. படத்தை வாங்கிய நிறுவனம் படத்தை நேற்று வெளியிட ஒரு நேரத்தை குறித்திருந்தது. ஆனால் அதற்கு முன்பே தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட போலி இணையதள பக்கங்களில் வெளியானது. இதனால் ஓடிடி நிறுவனம் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே படத்தை வெளியிட்டது.

பொதுவாக தியேட்டரில் வெளியிடப்படும்போது, தமிழ்நாட்டில் ஏதோ ஒரு தியேட்டரில் வீடியோவாக படம் பிடிக்கப்பட்டு அதன் பிரதியே திருட்டுத்தனமாக வெளிவரும். ஒரிஜினல் டிவிடி வெளிவந்த பிறகே ஒரிஜினல் குவாலிட்டியில் வெளியாகும். தற்போது இந்தப் படம் போலி இணைய தளத்தில் நல்ல தரத்தில் வெளியாகி உள்ளது. புதிய திரைப்படங்களுக்கு தியேட்டர்களில்தான் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. ஆன் லைன் பாதுகாப்பானது என்ற கருத்தில் இப்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிவந்த ஹாலிவுட் படமான எக்ஸ்ட்ராக்‌ஷன் இணைய தளத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Blonde ,
× RELATED இணையதள செஸ்: சாம்பியனை வீழ்த்திய வைஷாலி