×

சினிமா கலைஞர்களுக்கு ரூ.45 லட்சம் அக்‌ஷய் குமார் வழங்கினார்

பாலிவுட்டை சேர்ந்த சினிமா அமைப்பில் உள்ள 1500 சினிமா கலைஞர்களுக்கு தலா ரூபாய் 3000 வீதம் மொத்தம் 45 லட்ச ரூபாயை நடிகர் அக்‌ஷய் குமார் நிதி உதவி செய்துள்ளார். இந்த பணத்தை அவர், அவர்களின் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்துள்ளார். இந்த நிதி உதவியால் 1500 சினிமா கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அக்‌ஷய் குமார் ஏற்கனவே மத்திய அரசின் பிரதமர் நிவாரண நிதிக்காக ரூபாய் 25 கோடி நிதியுதவி செய்துள்ளார். அதன் பின்னர் மும்பை மாநகராட்சிக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க 3 கோடி ரூபாயை கொடுத்துள்ளார். மும்பை போலீஸ் பவுண்டேஷனுக்கு 2 கோடி ரூபாய் நிதி அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மேலும் 45 லட்ச ரூபாய் நிதி உதவி செய்ததற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Tags : Akshay Kumar ,Rs ,
× RELATED புதிய உச்சத்தில் தங்கம்.! ஒரு சவரனுக்கு ரூ.72 உயர்ந்து ரூ.41,664 விற்பனை