×

ஊரடங்கில் உருவான கொரோனா வைரஸ் படம்

தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா எப்போதும் தன்னை பரபரப்பாக வைத்துக் கொண்டிருப்பார். கிளைமாக்ஸ் என்கிற தனது அடல்ஸ் ஒன்லி படத்தின் டிரைலரை வெளியிட்டு பரபரப்பு கிளப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், கொரோனா ஊரடங்கு காலத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு படத்தை எடுத்து முடித்து, அதற்கு கொரோனா வைரஸ் என்று தலைப்பு வைத்துள்ளார். ஊரடங்கு காரணமாக தனித்திருக்கும் ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்னைகள்தான் கதை. கூட்டுக்குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு சளி, இருமலுடன் காய்ச்சல் வருகிறது. அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்று வீட்டில் இருப்பவர்கள் சந்தேகப்படுகின்றனர். 

பிறகு அவளை எப்படி நடத்துகிறார்கள் என்பதுதான் படம். இதுகுறித்து ராம்கோபால் வர்மா கூறியிருப்பதாவது: இது கொரோனா வைரஸ் பற்றிய படம் அல்ல. அந்த வைரஸ் நமக்குள் ஏற்படுத்தியுள்ள பயத்தால் உருவாகும் பிரச்னைகளை பேசுகிறது. ஊரடங்கில் அரசாங்கத்தின் உத்தரவுகளை மதித்து, உரிய சமூக இடைவெளியுடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.

Tags :
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...