×

செப்டம்பரில் வெனிஸ் திரைப்பட விழா

உலகில்  நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கேன்ஸ் திரைப்பட விழா மிகப்  பெரியதாகும், அதற்கு அடுத்த பெரிய திரைப்பட விழா வெனிஸ் திரைப்பட  விழாவாகும். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழா தேதி  குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இணையதளம் மூலம் பட  விழா நடக்கிறது என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் வெனிஸ் திரைப்பட விழா திட்டமிட்டபடி செப்டம்பரில் நடைபெறும்  என்று வெனிஸ் ஆளுநர் லூகா ஸாயா அறிவித்துள்ளார். விழா திட்டமிட்டபடி இந்த  ஆண்டு நடைபெறவிருந்தாலும் அதில் குறைவான திரைப்படங்களே திரையிடப்படும்  என்று ஸாயா தெரிவித்துள்ளார். வெனிஸ் திரைப்பட விழா நடக்காமல் போனாலும்  போகுமே தவிர  ஆன்லைன் நிகழ்வாக நடைபெறாது என்பதை திரைப்பட விழா  ஏற்பாட்டாளர்கள் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Venice Film Festival ,
× RELATED சோனியா அகர்வால் நடிக்கும் தண்டுபாளையம்