2 மாதமாக அபுதாபியில் தவிக்கும் நடிகை

பிரபல பாலிவுட் நடிகை மவுனிராய். தற்போது  பிரம்மாஸ்த்ரா, முகல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 2 மாதங்களுக்கு முன்பு அபுதாபி சென்ற அவர் தற்போது நாடு திரும்ப முடியாமல் அங்கு தவித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு போட்டோ ஷூட்டுக்காக 4 நாள் வேலையாக அபுதாபி வந்தேன். நான்கு நாள் பணி முடிந்த பிறகு எனது அடுத்த படப்பிடிப்பு 15 நாட்களுக்கு பிறகுதான் என்பதால் ஒரு வாரம் தங்கியிருந்து ஊர்சுற்றி பார்க்கலாம் என்று நினைத்து தங்கிவிட்டேன்.

அதுதான் தவறாக போய்விட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதமாக இங்கு தவித்து வருகிறேன். எனது குடும்பத்தினர் மேற்கு வங்காளத்தில் உள்ள கூச்பெஹாரில் இருக்கிறார்கள். அந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்கிற ஆசை அதிகரித்து வருகிறது. வயதான எனது அம்மாவை என் சகோதரர் அருகில் இருந்து கவனித்து வருவது ஆறுதலாக இருக்கிறது என்கிறார் மவுனிராய்.

Related Stories:

>