×

சென்னை மருத்துவமனையில் அஜித்குமார்..! உடல்நிலை பாதிப்பா?

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை. தற்போது நடிக்கும் 'வலிமை' என்ற படத்தின் படப்பிடிப்பு, ஊரடங்கு முடிந்து நிலைமை சரியான பிறகே தொடர வேண்டும் என்று அஜித் குமார் தரப்பில் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை முதல் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அஜித் குமார், அவரது மனைவி ஷாலினி நடந்து செல்லும் வீடியோ மற்றும் போட்டோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது.

கொரோனா வைரஸ் நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் இந்த நேரத்தில், அஜித் குமாரின் வீடியோ மற்றும் போட்டோக்கள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது. இதுகுறித்து அஜித்குமார் தரப்பில் கேட்டபோது, "இதற்கு முன் அஜித் குமாருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதிலிருந்து அவர் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தனது டாக்டரை சந்தித்து உடல்நிலையை பரிசோதித்துக்கொள்வது வழக்கம். இன்றும் (நேற்று) அஜித் குமார் அதற்காகத்தான் டாக்டரை சந்தித்தார்" என்று தெரிவிக்கப்பட்டது.

Tags : Ajith Kumar ,Chennai Hospital ,
× RELATED சென்னை ஈச்சம்பாக்கத்தில் உள்ள நடிகர்...