×

கொரோனாவால் திரையுலகம் பாதிப்பு எதிரொலி; 3 படங்களில் ரூ.3 கோடி சம்பளத்தை விட்டுகொடுத்தார் விஜய் ஆண்டனி

கொரோனா வைரஸ் தாக்குதல் உச்சத்தை அடைந்து வரும் நிலையில் 3வது கட்ட ஊரடங்கிற்கு பிறகும் தியேட்டர்கள் திறக்கப்படுமா, படப்பிடிப்புகள் தொடங்கப்படுமா என்று உறுதியாக தெரியாத நிலை உள்ளது. ஒரு வேளை திறக்கப்பட்டாலும் சினிமா தனது பழைய நிலையை அடைய குறைந்தது 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஆகும் என்கிறார்கள். இதனால் நிலமை சீராகும் வரையில் முன்னணி நடிகர்கள் தங்களின் சம்பளத்தை கணிசமாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை எல்லா மொழி திரையுலகிலும் எழுந்துள்ளது.

பாலிவுட் மற்றும் தெலுங்கு நட்சத்திரங்கள் சம்பளத்தை குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளார்கள். ஆனால் எவ்வளவு என்று சொல்லவில்லை. இந்த நிலையில் தமிழ் நடிகரும், இசை அமைப்பாளருமான விஜய் ஆண்டனி தான் நடித்து வரும் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய 3 படங்களின் சம்பளத்தில் 25 சதவிகிதத்தை குறைத்துள்ளார். ஒவ்வொரு படத்திலும் தலா ரூ.1 கோடியை அவர் விட்டு கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் 3 தயாரிப்பாளர்களுக்கும் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து அக்னி சிறகுகள் தயாரிப்பாளர் டி.சிவா கூறியதாவது: 50 நாட்களுக்கு மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக தவித்து வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு,ஒரு முன்னணி நடிகர் தாமாகவே முன்வந்து தன் சம்பளத்தை குறைந்த கொண்டது அனைவரும் பாராட்ட வேண்டிய, தமிழ் சினிமாவுக்கு முன்னுதாரணமாக இருக்கப்போகும், ஒரு நடவடிக்கை. அவரைப் போலவே அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுத்து அனைத்து தயாரிப்பாளர்களையும் இந்த இக்கட்டான நேரத்தில் காப்பாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டு கொள்கிறேன் என்கிறார்.

Tags : World ,Corona ,Vijay Antony ,
× RELATED சீனியர்களுடன் நடிக்கும்போது பதற்றமாக...