×

சூடுபிடிக்கும் தயாரிப்பாளர் சங்க தேர்தல்

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை அரசின் சிறப்பு அதிகாரி நிர்வகித்து வருகிறார். வரும் ஜூன் 30ம் தேதிக்குள் சங்க தேர்தல் நடத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள் ளது. இதையடுத்து தேர்தல் வேலைகள் சூடுபிடித்திருக்கிறது. இயக்குனர் ராம நாராயணன் மகன் என்.ராமசாமி என்கிற முரளி தலைமையில் தயாரிப்பாளர்களின் நலன் காக்கும் அணி உருவாகியிருக்கிறது.

சங்க தலைவர் பதவிக்கு முரளி போட்டியிட ராதாகிருஷ்ணன், கே.ஜே.ஆர் செயலாளர் பதவிக்கும், சுபாஷ் சந்திரபோஸ், மைக்கேல் ராயப்பன் துணை தலைவர் பதவிக்கும், சந்திரபிரகாஷ் ஜெயின் பொருளாளருக்கும் மேலும் 21 பேர் செயற்குழு உறுப்பினர்கள் பொறுப்புக்கும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே டி.சிவா தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி அமைக்கப்பட்டிருக்கிறது. வரும் ஏப்ரல் முதல்வாரம் தேர்தல் அட்டவணை வெளியாகவிருக்கிறது.

Tags : Producer Association Election ,
× RELATED தயாரிப்பாளர் சங்க தேர்தல் களம்