கோலிவுட், பாலிவுட், டோலிவுட் ஷட்டவுன்; ரூ.5,000 கோடி முடங்கும்

இன்றிலிருந்து சினிமா படப்பிடிப்புகள் உள்பட அனைத்து திரையுலக பணிகளும் நிறுத்தப்படும் என இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், இந்திய திரைப்பட தொழிலாளர் மன்றம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 2 நாட்களாக தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட அனைத்து திரையுலக பணிகளும் முடங்கியுள்ளது.

வரும் 31ம் தேதி வரை இந்த பணிகள் நிறுத்தம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படங்களின் திரையிடல் மூலமாக அரசுக்கு கிடைக்கும் ஜிஎஸ்டி மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்த 15 நாளில் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

பட  ரிலீஸ், படப்பிடிப்புகள், டப்பிங், எடிட்டிங், இசை கோர்ப்பு, கிராபிக்ஸ், ஒலிப்பதிவு உள்ளிட்ட பணிகள் நாடு முழுவதும் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த 15 நாளில் ரூ.5 ஆயிரம் கோடி முடங்கும் என தயாரிப்பாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் மட்டும் 36 படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. திரைப்பட தொழிலாளர்களுக்கு ஒரு நாளில் ரூ.1 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படும் என பெப்சியின் தலைவர் செல்வமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: