×

8 நானோ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: கவுன்ட்டவுன் தொடங்கியது

சென்னை: புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் 8 சிறிய வகை நானோ செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக செயற்கைக் கோள்களை வடிவமைத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டில் ‘ஓசன் சாட்-3’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் அமெரிக்க நாட்டின் ஆஸ்ட்ரோகாஸ்ட்-2 செயற்கைக்கோள்கள்-4, துருவா விண்வெளி நிறுவனத்தின் தைபோல்ட் 1 மற்றும் தைபோல்ட் 2 என்னும் 2 செயற்கைக்கோள்கள், ஐ.என்.எஸ். பூட்டான் சாட், பிக்ஸெல் நிறுவனத்தின் ஆனந்த் செயற்கைக்கோள் ஆகிய 8 நானோ செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படுகிறது.அதேபோல், இந்தியா – பூடான் ஒருங்கிணைந்த ஆராய்ச்சியின் கீழ் வடிவமைக்கப்பட்ட ஐ.என்.எஸ்-2பி செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது 2019ம் ஆண்டு பிரதமர் மோடி அரசு முறைப் பயணமாக பூடான் சென்றபோது, இருநாடுகளுக்கு இடையே செயற்கைக்கோள் கூட்டு ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, தற்போது ஐ.என்.எஸ் -2பி செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளதாகவும், இவை பூடானின் மேற்பரப்பில் ஆய்வு மேற்கொள்ளும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், கடலின் தன்மை, அதன் மேற்பரப்பு, வெப்பநிலை, காற்றின் திசைமாறுபாடுகள், வளிமண்டலத்தில் நிகழும் ஒளியியல் மாற்றங்கள் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து தகவல்களை தரும் செயற்கைக்கோள்களாக விளங்குகிறது. இந்த பி.எஸ்.எல்.வி. சி-54 ராக்கெட் 4 நிலைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு நிலையும் தனித்தனி உந்துவிசை அமைப்புடன் செயல்படும் திறன் கொண்டவை. முதல் மற்றும் 3வது உந்து நிலைகளில் திட எரிபொருளும், 2வது மற்றும் 4வது நிலை திரவ உந்துசக்தியும் பயன்படுத்தப்படுகிறது.இந்த ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ‘கவுன்ட் டவுன்’ என்று அழைக்கப்படுகிற இறங்குவரிசை ஏற்பாடுகள் நேற்று காலை 10.26 மணிக்கு தொடங்கியது. ஏற்கனவே, கடந்த 18ம் தேதி ‘ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்’ என்ற நிறுவனம் வடிவமைத்த 3 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன் கூடிய ‘விக்ரம்-எஸ்’ என்ற முதல் தனியார் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது….

The post 8 நானோ செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி54 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: கவுன்ட்டவுன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Earth ,Dinakaran ,
× RELATED நிலவுக்கு விண்கலத்தை ஏவியது சீனா