×

தெல்டும்டே ஜாமீன் என்ஐஏ மனு தள்ளுபடி

புதுடெல்லி:  மகாராஷ்டிராவில் 2018ம் ஆண்டு புனே அருகே உள்ள பீமா கோரேகானில் நடந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு ஒரு நாள் முன்னதாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி புனேவில் எல்கார் பரிஷத் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதுதான், வன்முறைக்கு வித்திட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. பின்னர், இந்த வழக்கு என்ஐஏ.வுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் தெல்டும்டே 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டு நவி மும்பையில் உள்ள டலோஜா சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கடந்த 18ம் தேதி உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. எனினும், இந்த உத்தரவை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைத்தது. அவருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் என்ஐஏ மனு தாக்கல் செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் மற்றும் நீதிபதி ஹிமா கோஹ்லி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, என்ஐஏ மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். …

The post தெல்டும்டே ஜாமீன் என்ஐஏ மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Teldumde ,NIA ,New Delhi ,Maharashtra ,Bima Goregaan ,Pune ,Telumde Bail ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...