×

விஜய் சேதுபதியின் கிஸ்சுக்கு தடை வருமா?

வழக்கமாக ரசிகர்கள் தங்களது பேவரைட் நடிகரை சந்திக்கும்போது கைகுலுக்கி அவர்களுடன் நின்று போட்டோ எடுத்துக்கொள்வார்கள். பதிலுக்கு அந்த ரசிகரை கட்டியணைத்து முத்தம் தரும் ஒரே நடிகர் விஜய் சேதுபதிதான். இதுபோல் எந்த நடிகரும் செய்வதில்லை. இதுபோல் தன்னுடன் நடிக்கும் சில நடிகர்களுக்கும் மற்றும் இயக்குனர்களுக்கும் விஜய் சேதுபதி முத்தம் தருவார்.

சமீபத்தில் மாஸ்டர் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பில் விஜய்யை கட்டிப்பிடித்து முத்தம் தந்தார். அன்பு மிகுதியால் விஜய் சேதுபதி இப்படி செய்தாலும், தற்போது கொரோனா பாதிப்பு நிலவுவதால் அவர் முத்தம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என திரையுலகை சேர்ந்த சிலர் கூறுகிறார்கள்.

Tags : Vijay Sethupathi ,Kiss ,
× RELATED 200 பேர் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதி