
- சென்னை
- லீலாவதி
- சீனிவாசன்
- கமலா
- மலர்க்கொடி
- வெலகால்பட்டி
- சங்ககிரி தாலுக்கா
- தர்மபுரி மாவட்டம்
- நீதிமன்றம்
- தின மலர்
சென்னை: தர்மபுரி மாவட்டம் சங்ககிரி தாலுகா வேலகல்பட்டியில் உள்ள சொத்து தொடர்பாக லீலாவதி, சீனிவாசன் ஆகியோருக்கும் கமலா, மலர்கொடி உள்ளிட்டோருக்கும் இடையே பாகப்பிரிவினை வழக்கு தர்மபுரி கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில், குறுக்கு விசாரணையின் போது, இரண்டாவது மனைவியின் மகன் தரப்பு வழக்கறிஞர், மூன்று பெண்களின் தந்தை மீதான உரிமை குறித்தும், அவர்களின் தாயை அவமதிக்கும் வகையிலும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வழக்கில் கடந்த 2015ல் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து லீலாவதி, சீனிவாசன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது விசாரணை நீதிமன்றத்தில் நடந்த குறுக்கு விசாரணை குறித்து நீதிபதிக்கு தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி மேல்முறையீடு வழக்கில் உத்தரவு பிறப்பித்தார்.அதில், நீதிமன்றத்திலேயே நீதிபதி முன்பே இந்த விவகாரம் நடைபெற்றுள்ளதால், அதற்காக உயர் நீதிமன்றம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. மனுதாரர்களை அவமானப்படுத்துவதற்காகவோ, அவர்களுக்கு காயத்தை ஏற்படுத்துவதற்காகவோ குறுக்கு விசாரணை இல்லை. தங்கள் உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடும் பெண்களின் நடத்தையை படுகொலை செய்யும் வகையில் வழக்கறிஞர்களின் கேள்விகள் இருக்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்….
The post குறுக்கு விசாரணையில் நடந்த தவறுக்காக மேல்முறையீடு உத்தரவில் மன்னிப்பு கோரிய நீதிபதி: உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் பாராட்டு appeared first on Dinakaran.