×

நடிகர் மகனுடன் யாஷிகா காதல்?

நடிகை யாஷிகாவின் கவர்ச்சிக்கு ரசிகர்கள் ஏராளம். அதேபோல் அவரைப் பற்றிய கிசுகிசுவுக்கும் பஞ்சமில்லை. ஏற்கனவே நடிகர் மஹத்துடன் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டார். இந்நிலையில் நடிகர் மஹத் தனது காதலியை மணந்து யாஷிகாவுடனான கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் கடந்த 2 தினங்களாக யாஷிகாவுக்கும், பிரபல நடிகர் மகன் ஒருவருக்கும் காதல் என்று நெட்டில் தகவல் பரவி வருகிறது. அவர்கள் இருவரும் அருகருகே அமர்ந்திருக்கும் படங்களும் வெளியாகின.

யார் அந்த நடிகர் என்று விசாரித்தபோது குணசித்ர நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி பெயர் அடிபட்டது. இதுகுறித்து தம்பி ராமையா கூறும்போது,’உமாபதி நடிக்கும் சிறுத்தை சிவா படத்தை நான் இயக்கி வருகிறேன். அதில் யாஷிகா கதாநாயகியாக நடிக்கிறார். இருவரும் பங்ேகற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது.

அந்த படங் களை வெளியிட்டுதான் இருவருக்கும் காதல் என்று யாரோ  கிசுகிசு பரப்பியிருக்கிறார்கள். சமீபத்தில் என் மகளுக்கு திருமணம் நடத்தினேன். அடுத்து உமாபதிக்கும் பெண் பார்த்து வருகிறேன். அவரைப்பற்றி தவறான தகவலை பரப்ப வேண்டாம். உமாபதி இப்போது வளர்ந்து வரும் நடிகர். திரையுலகில் அவர் இன்னும் நெடுந்தூரம் செல்ல வேண்டும், நிறைய சாதிக்க வேண்டி உள்ளது’ என்றார்.

Tags : Yashika ,actor son ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!