×

இயக்குநராகிறார் காவேரி! காவேரியை நினைவிருக்கிறதா?

‘சமுத்திரம்’ படத்தில் சரத்குமார், முரளி சகோதரர்களுக்கு பாசமலராய் நடித்து பட்டையைக் கிளப்பினாரே அவரேதான். ஏராளமான மலையாளம் மற்றும் தமிழ்ப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, பின்னர் குமரியாகவும் கலக்கினார். தெலுங்கு இயக்குநர் சூரியகிரணை (தமிழில் ‘மவுன கீதங்கள்’ படத்தில் நடித்த மாஸ்டர் சுரேஷ்) திருமணம் செய்து செட்டில் ஆனவர், ரீ என்ட்ரி கொடுத்து அவ்வப்போது நடித்துக் கொண்டுதான் இருந்தார்.

இப்போது இயக்குநர் - கம் - தயாரிப்பாளராக அவதாரம் எடுத்திருக்கிறார். இன்னமும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தை தமிழ் - தெலுங்கு இருமொழிகளிலும் இயக்குகிறார். ரொமான்ஸ் த்ரில்லர் வகையாம். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டீஸரை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டிருக்கிறார்.

Tags : Kaveri ,
× RELATED புதிய இயக்குநர் நியமனம்