×

மாலத்தீவில் வில்லாக வளைந்த ஹன்சிகா

தமிழில் ஹன்சிகாவின் தலை தெரிந்து நீண்ட நாள் ஆகிவிட்டது. கடந்த ஆண்டு அதர்வாவுடன் 100 என்ற படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மஹா படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இப்படத்தில் பெண் சாமியார்போல் உடை அணிந்து சுருட்டு புகைத்த புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில் இப்படத்தில் சிம்புவும் நடித்து வருகிறார்.

சிம்பு, ஹன்சிகா நெருக்கமாக நடித்த ரொமான்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டன. சமீபத்தில் விடுமுறை பயணமாக மாலத்தீவு சென்றார் ஹன்சிகா. அங்குள்ள கடற்கரையில் நீச்சல் உடை அணிந்து உடற்பயிற்சி செய்யத் தொடங்கினார்.

காலை முன்புறமாக வைத்து அப்படியே வில்லாக பின்புறம் சாய்ந்து கைகளை ஊன்றி நின்றார். அந்த புகைப்படங்களை நெட்டில் பகிர்ந்திருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’விடுமுறை நாளில் கடற்கரையில் வழக்கமான எனது வைட்டமின் சக்தியை சன் பாத் மூலம் பெற்றேன். பின்னர் கடலில் நீந்தி விடுமுறை நாளை மகிழ்ச்சியாக செலவழித்தேன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Hansika ,Maldives ,
× RELATED தங்கதமிழ்ச்செல்வன் குற்றச்சாட்டு: பல...