தயாரிப்பாளர் சங்க கில்ட் பூட்டு உடைப்பு

தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் கில்டு சென்னை தி நகரில் செயல்பட்டு வருகிறது. ஜாகுவார் தங்கம் தலைவராக இருக்கிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் ஒரு சிலர் கில்டு அலுவலகத்துக்கு காலையிலேயே வந்து பூட்டை உடைக்க முயற்சி செய்தார்களாம். இதுகுறித்து சங்க மேலாளர் மாம்பலம் போலீசில் புகார் அளித்தார்.

அதில் முன்னதாக தான் அலுவலகத்துக்கு வந்த போது பூட்டு உடைக்கும் சம்பவம் நடந்ததாகவும், உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னதால் அவர்கள் விரைந்து வந்தனர். போலீசை கண்டதும் சிலர் தப்பிவிட்டனர். ஒருவர் மட்டும் போலீசில் சிக்கியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories:

>