×

காளையார்கோவிலில் கழிவுநீர் கால்வாய், சாலையை ஆக்கிரமித்துள்ள புதர்கள்-அகற்றப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

காளையார்கோவில் : காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்லும் சாலையின் ஓரமாக உள்ள கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் புதர் மண்டி கிடக்கிது. அத்துடன் அந்த புதர்கள் சாலையையும் ஆக்கிரமித்துள்ளது. எனவே புதர்களை அகற்றி வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காளையார்கோவிலை சுற்றியுள்ள 43 பஞ்சாயத்துக்கு தலைமையிடமாக காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு செல்லும் சிமின்ட் சாலை மிகவும் மோசமான நிலையில் தற்போது மண் சாலையாக மாறி உள்ளது. மேலும் சாலையின் ஓரமாக உள்ள கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் புதர்மண்டி காணப்படுகிறது. அப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கால்நடை மருத்துவமனை, 100க்கும் மேற்பட்ட  வீடுகள் உள்ளது. அதிகாரிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அச்சாலையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றார்கள்.மேலும் ஆக்கிரமித்துள்ள புதர்களால் இரவு நேரங்களில் விஷப்பூச்சிகள் அதிகளவில் நடமாடுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். மேலும் தேங்கிய கழிவு நீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரப்பும் காரணிகளாக மாறுகின்றன. எனவே இந்த கழிவுநீர் கால்வாயை முறையாக தூர்வாரி மேல் பகுதியில் மூடிகள் அமைக்க வேண்டும். அத்துடன் சாலையை மறைத்துள்ள புதர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள்  கோரியுள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், அரசு அலுவலகங்கள் அதிகம் உள்ள இப்பகுதியில் தினந்தோறும் வந்துசெல்வோர் எண்ணிக்கை மிக அதிகம். கழிநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் அதில் குப்பைகள் தேங்கி தண்ணீர் செல்ல முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இந்த சாலையில் ஆக்கிரமித்துள்ள புதர்களை அகற்றுவதுடன் வாய்க்காலை தூர்வாரி மேலே சிமென்ட் மூடிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்….

The post காளையார்கோவிலில் கழிவுநீர் கால்வாய், சாலையை ஆக்கிரமித்துள்ள புதர்கள்-அகற்றப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Bulgarkovye ,Kalyarko ,Uradsky Union ,Sewage ,Cowley ,
× RELATED தூய்மை பணி திட்டத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு