×

டி.ஆருக்கு ஜோடி நமீதா!

‘மாநாடு’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் மகன் சிம்புவுக்கு போட்டியாக புதிய படத்தை துவங்கி இயக்கி நடித்து வருகிறார் டி.ராஜேந்தர். இந்தப் படத்துக்கு இசையும் இவரே. நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் நாயகியாக நமீதா நடிக்கிறார். திருமணத்துக்குப் பிறகு இஷ்டம் போல் சாப்பிட்டு வெயிட் போட்டிருந்த நமீதா இந்தப் படத்தில் நடிப்பதற்காகவே உடல் எடையை கணிசமாகக் குறைத்துள்ளாராம். உடல் எடை குறைக்கும் சிகிச்சைக்காக ஏழெட்டு லட்சம் டாக்டருக்கு மொய் எழுதியுள்ளார் நமீ.

தமிழ் சினிமாவில் சரிந்துபோன தன் மார்க்கெட்டை டி.ராஜேந்தர் உயர்த்துவார் என்ற நம்பிக்கையில் உள்ளாராம். டி.ஆரும் நமீயின் அங்க அசைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துமளவுக்கு காட்சிகளை உருவாக்கியுள்ளாராம். தற்போது தீவிர படப்பிடிப்பில் உள்ள டி.ஆர்., மகனின் ‘மாநாடு’ படத்துடன் இந்தப் படத்தையும் ரிலீஸ் செய்தால் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என்கிறது கோலிவுட் பட்சி.

Tags : Namitha ,TR ,
× RELATED ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு டி.ஆர்.பாலு வேட்பு மனு தாக்கல்