சென்னை: நெல்லையில் 2 நாட்கள் நடைபெறும் பொருநை இலக்கிய திருவிழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலியில் தொடங்கி வைத்தார். விழாவில் விருது பெற்ற எழுத்தாளர்கள், தமிழறிஞர்கள், பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் திருநெல்வேலியில் இலக்கிய திருவிழா முதன்முதலாக தொடங்கியது. அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ், ஆட்சியர் விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளை கொண்டாடும் வகையில் சென்னை மற்றும் வைகை, காவேரி, சிறுவானி, பொருநை ஆகிய ஐந்து இலக்கிய திருவிழாக்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் முதல் திருவிழாவாக நெல்லையில் பொருநை இலக்கிய திருவிழா வரும் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இந்த பொருநை திருவிழாவில் தனித் தனியாக மொத்தம் ஐந்து அரங்குகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தமிழ் சமூகம் இலக்கிய முதிர்ச்சியையும், பண்பாட்டின் உச்சத்தையும் அடைந்த பெருமைமிகு சமூகம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருநை இலக்கிய திருவிழாவை தொடங்கி வைத்து முதல்வர் பேசினார். பொருநை, காவிரி, வைகை, சிறுவாணி, சென்னை ஆகிய 5 இலக்கிய திருவிழா நடத்தப்படுகிறது. இந்திய துணை கண்டத்தின் வரலாறு தமிழ் மண்ணில் இருந்து எழுதப்படட்டும் என முதல்வர் கூறினார். தமிழ் நாகரித்தின் செழுமையை உலகறியச் செய்யும் வகையில் நடிபெறும் இலக்கிய விழாவாகும். இலக்கியவாதிகள், சாகித்ய அகாடமி விருதாளர்கள், கவிஞர்கள் எழுத்தாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்….
The post பொருநை இலக்கிய திருவிழா காணொலியில் தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.
