புதிய பட வாய்ப்பு இல்லை; பேஷன் ஷோவில் நடக்கும் தமன்னா

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் பிஸியாக நடித்து வந்தார் தமன்னா. கடைசியாக தமிழில் விஷால் ஜோடியாக ஆக்‌ஷன் என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை. தெலுங்கில் 2, இந்தியில் ஒரு படம் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் பங்கேற்கும் நேரம் குறைந்த நிலையில் பிற விஷயங்களில்  கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். நகைக்கடை வைத்திருப்பதுடன் நகை டிசைன் வேலையும் இவருக்கு தெரியும்.

அதில் கவனம் செலுத்துவதுடன் பேஷன் ஷோ நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேடையில் தோன்றி வண்ண வண்ண உடை அணிந்து கேட்வாக்கிலும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் தான் பங்கேற்ற பேஷன் ஷோ நிகழ்வை இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். உள்ளாடைகள் தெரிய அவர் அழகு நடை நடந்தது பலரையும் கவர்ந்திருக்கிறது. ஒரு சிலர் உள்ளாடை தெரிய நடந்து கிக் ஏற்றுகிறீர்களே என கமென்ட் பகிர்ந்திருக்கின்றனர்.

Related Stories:

>