×

நடிகர் பெயரில் பெண்களுக்கு வலை

‘நோட்டா’ பட ஹீரோ விஜய தேவரகொண்டா இணைய தளத்தில் ரசிகர் களுடன் தொடர்பில் இருப்பவர். உடனுக்குடன் தனது கருத்துக்களை சமூக வலை தளத்தில் பகிர்வார். அவரை பின்தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை பல லட்சங்களை கடந்துள்ளது.

இந்நிலையில் சிலர் விஜய தேவரகொண்டா பெயரில் போலியான இணைய தள ஃபேஸ்புக் தொடங்கி அதன்மூலம் பெண்களை தவறான செயலுக்கு அழைப்பதாக விஜய தேரகொண்டாவுக்கு தகவல் வந்தது.

உடனடியாக இதுகுறித்த விவரத்தை தரும்படி உதவியாளர்களிடம் தெரிவித்த விஜய தேவரகொண்டா ஐதாபாத் போலீஸ் நிலையத்தில் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார். இதுகுறித்து, ‘உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கேட்டிருக்கிறார்.

Tags :
× RELATED தம்பதிக்கு கொரோனா என வதந்தி பரப்பியவருக்கு வலை