×

ஹீரோ தலையில் பொறுப்பை ஏற்றிய இயக்குனர்

நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் நெல்சன். இவர் அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் என்ற மருத்துவ பின்னணி கதையாக இயக்கி வருகிறார். அனிரூத் இசை அமைக்கிறார். சிவகார்த்திகேயனும் அனிருத்தும் நெருங்கிய நண்பர்கள். அவரது இசையில் சிவகார்த்திகேயன் கல்யாண வயசு என்ற பாடல் பாடினார்.

சிவகார்த்தியும், அனிரூத்தும் ‘சிறப்பு விருதுக்கு தகுதியானவர்கள் என்று தேர்வு செய்யப்பட்டனர். அதற்கு வாழ்த்து சொல்லும் சாக்கில் என் படமே உங்கள் இருவரை நம்பித்தான் இருக்கிறது என்று படத்தின் எல்லா பொறுப்பையும் இருவர் மீதும் இறக்கி வைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன்.

Tags : hero ,
× RELATED புதிய இயக்குநர் நியமனம்