×

போட்டு தாக்கிய சமந்தா

விஜய்சேதுபதி திரிஷா நடித்து தமிழில் ஹிட்டான 96 படத்தை தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்தனர். விஜய்சேதுபதி வேடத்தில் சர்வானந்த், திரிஷா வேடத்தில் சமந்தா நடித்தனர். இப்படம் வெளியாகி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. சமந்தாவை பலரும் விமர்சித்தனர். இதனால் ஏற்கனவே மற்றொரு படத்தில் ஒப்பந்தம் ஆகியிருந்த சமந்தாவை நீக்கிவிட்டு அதிதிராவ் ஹைத்ரியை தேர்வு செய்தனர்.

இதில் கோபம் அடைந்த சமந்தா,’ஒரு ஹீரோ 3 தோல்வி படம் தந்தாலும் அவரது படத்தை ரசிகர்கள் பார்க்கிறார்கள் ஆனால் ஹீரோயினை குறை சொல்கிறார்கள். ஹீரோவுக்கு இணையாக ஹீரோயின்களுக்கு சம்பளமும் தருவதில்லை. நடிகர்போல் நடிகைகளும் கடுமையாக உழைக்கவே செய்கிறார்கள்’ என பொங்கியிருக்கிறார்.

Tags : Samantha ,
× RELATED எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டுள்ளேன்: சமந்தா மகிழ்ச்சி