இயக்குனருடன் திருமணமா? அனுஷ்கா பதில்

நடிகை அனுஷ்கா காதல் கிசுகிசு திரையுலகில் சூடான டாப்பிக்காக விவாதிக் கப்பட்டு வருகிறது. நடிகர் பிரபாஸ், அனுஷ்கா காதலிப்பதாக கடந்த 3 ஆண்டு களாக கிசுகிசு உலா வந்த நிலையில் கடந்த வாரம் அனுஷ்காவுக்கும் இஞ்சி இடுப்பழகி படத்தின் இயக்குனர் பிரகாஷ் கோவெல்முடிக்கும் காதல், இருவரும் திருமணம் செய்யவிருப்பதாகவும் வேகமாக கிசுகிசு பரவியது.

இதுகுறித்து மவுனம் காத்து வந்த அனுஷ்கா தற்போது பதில் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது, ’ஒரு விஷயம் மட்டும் உண்மை. அது என்னவென்றால் கிசுக்கிசுக்கள், வதந்திகள் மூலம் நான் பாதிப்படைவது கிடையாது. என்னுடைய திருமணத்துக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்கள் என்று தெரியவில்லை.

யாருடனும் உறவில் இருப்பதை யாராலும் மறைக்க முடியாது, என்னால் மட்டும் எப்படி மறைக்க முடியும்? திருமணம் என்பது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயம். மக்களும் அதை உணர்வுபூர்வமாகவே அணுகுவார்கள். எனக்கென்று வாழ்வில் தனி இடங்கள் உள்ளன. திருமணம் என்பது புனித பந்தம் அதை சமயம் வரும்போது தெரிவிக்கறன்’ என்றார் அனுஷ்கா.

Related Stories:

>