×

தெலங்கானாவில் எம்எல்ஏக்களை பேரம் பேசிய விவகாரம் பாஜ தேசிய பொது செயலாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு: கேரள பாஜ பொறுப்பாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

திருமலை: தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி எம்எல்ஏக்களை பேரம் பேசிய விவகாரத்தில் பாஜ தேசிய பொது செயலாளர் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக கேரளா பாஜ பொறுப்பாளர் உள்பட 3 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்) ஆட்சி செய்து வருகிறது. இங்கு எம்எல்ஏ பைலட் ரோஹித்ரெட்டி உள்பட 4 எம்எல்ஏக்களை தலா ரூ.100 கோடிக்கு ஐதராபாத்தில் உள்ள பண்ணை வீட்டில் வைத்து பாஜ சார்பில் பேரம் பேசப்பட்டது. இதுதொடர்பாக தெலங்கானா மாநில தனிப்படை போலீசார்  ராமச்சந்திர பாரதி (எ) சதீஷ்சர்மா, நந்தகுமார் மற்றும் சிம்மயாஜி சுவாமி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில்  பாஜ தேசிய பொது செயலாளர் சந்தோஷூக்கு போலீசார் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. அவரை கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என எஸ்ஐடி மற்றும் மாநில அரசு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது. இதற்கு, அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் ஏற்படும் தாமதம் குறித்து குறித்து அரசின் கூடுதல் அட்டர்னி ஜெனரல் உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, இந்த விவகாரத்தில் மேலும் நடவடிக்கைகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும், கைது செய்யக்கூடாது என்ற முந்தைய உத்தரவுகளை நீக்க வேண்டும் கேட்டுக் கொண்டனர். அப்போது பாஜ நிர்வாகி   பிரேமேந்தர்ரெட்டி சார்பில் வழக்கறிஞர் மகேஷ் ஜெத்மலானி ஆஜராகி, குஜராத்  தேர்தலில் சந்தோஷ் பிசியாக இருப்பதாக நீதிமன்றத்தில் ஆஜராக இயலவில்லை என்று தெரிவித்தார். அதற்கு, ‘விசாரணைக்கு வர எவ்வளவு கால அவகாசம் தேவை’ என்று நீதிபதிகள் கேட்டனர்.இதையடுத்து நீதிபதிகள் அளித்த உத்தரவில், ‘இந்த முறை  41 ஏசிஆர்பிசி-ன் கீழ் சந்தோஷூக்கு வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அரசின் முழுமையான விவரங்கள் அடங்கிய பதில் மனுவை  தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறி அடுத்த விசாரணையை இம்மாத இறுதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இதற்கிடைேய இதுவரை நடந்த விசாரணை அடிப்படையில் போன்  ஆடியோ, குரல் பதிவுகளில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்த பிறகு சந்தோஷ், சீனிவாஸ்,  கேரளாவை சேர்ந்த பாஜ பொறுப்பாளர் ஜக்கு சுவாமி, தூஷார் வெள்ளப்பள்ளி  ஆகிய 4 பேர் மீது லஞ்ச தனிப்படை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்….

The post தெலங்கானாவில் எம்எல்ஏக்களை பேரம் பேசிய விவகாரம் பாஜ தேசிய பொது செயலாளர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு: கேரள பாஜ பொறுப்பாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Baja ,National Secretary General ,Ajar ,Telangana ,Kerala Baja ,Tirumalai ,Baja National General Secretary ,DRS Party ,Kerala ,
× RELATED டெல்லி முதலமைச்சர் அரவிந்த்...