சிரஞ்சீவி படத்திலிருந்து திரிஷா திடீர் விலகல்

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் திரிஷா கடந்த சில வருடங்களாக தெலுங்கு படங்களில் நடிக்காமல் தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்கான படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். இந்த தகவல் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தெரியவந்தது. ஆனால் திடீரென்று அப்படத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் திரிஷா.

படக்குழுவினருடன் ஏற்பட்ட மோதலே அவரது விலகலுக்கு காரணம். இதுபற்றி திரிஷா தனது கோபத்தை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

‘கால்ஷீட் கேட்க வரும் ஆரம்ப கட்டத்தில் ஒன்றை சொல்கிறார்கள். பின்னர் அதிலிருந்து மாறுபடுகிறார்கள். அவர்களின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் வித்தியாசம் தெரிகிறது.

இதனால் அவர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சிரஞ்சீவி சார் படத்திலிருந்து நான் விலகுகிறேன். பட குழுவுக்கு வாழ்த்துக்கள். தெலுங்கு பட ரசிகர்களை மற்றொரு பரவசமான படத்தின் மூலம் விரைவில் சந்திக்கிறேன்’ என்றார். தமிழில் பொன்னியின் செல்வன், ராக்கி, கர்ஜனை, பரமபதம் விளையாட்டு ஆகிய படங்களில் தற்போது திரிஷா நடித்து வருகிறார்.

Related Stories:

>