×

நதி போல ஓடிக்கொண்டிரு... நம்ம நண்பர் அஜித்... விஜய் சேதுபதிக்கு முத்தம்... தளபதி விஜய்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மாஸ்டர். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அப்போது விஜய் பேசியதாவது: இசை வெளியீட்டு விழாவில் என் ரசிகர்கள் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற  வருத்தம் இருக்கிறது. காரணம், இதற்குமுன் என் பட விழாவில் அரங்கிற்கு வெளியே நடந்த விஷயங்கள்தான். அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ஒரு நடிகனாக ஜெயித்தவுடன், அந்த இடத்தை  தக்கவைத்துக் கொள்வது ரொம்ப கஷ்டமான விஷயம். அப்படிப்பட்ட விஜய் சேதுபதி, இந்த படத்தில் எதற்காக வில்லனாக நடிக்கிறார் என்று கேட்டபோது, என்னை ரொம்ப பிடிக்கும் என்பதால் நடித்ததாக சொன்னார். ‘’மாநகரம்’’ மூலம் திரும்பி பார்க்க வைத்த லோகேஷ் கனகராஜ், ‘’கைதி’’ படத்தை  திரும்ப திரும்ப பார்க்க வைத்தார். ‘’மாஸ்டர்’’ படத்தில் என்ன பண்ணப் போகிறார்  என்று தெரியவில்லை.

‘’எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே’’ என்ற பாடலில், ‘’நீ நதி போல ஓடிக்கொண்டிரு’’ என்ற வரி இடம்பெறும். நதி போல ஓடிக்கொண்டிரு என்பதுதான் முக்கியம்.  கிட்டத்தட்ட அனைவரது வாழ்க்கையும் ஒரு நதி மாதிரிதான். சில இடங்களில்  வணங்குவார்கள், வாழ்த்துவார்கள். சில இடங்களில் பிடிக்காதவர்கள் கல்லெறிந்து  விளையாடுவார்கள். நதி பேசாமல் ஓடிக்கொண்டே இருக்கும். அந்த நதி மாதிரிதான் நம் வாழ்க்கையும். நமது வேலையை, நமது கடமையை செம்மையாக செய்துவிட்டு, அந்த  நதி மாதிரி அமைதியாக போய்க்கொண்டிருக்க வேண்டும். லைப் இஸ் வெரி சார்ட் நண்பா. ஆல்வேஸ் பி ஹாப்பி. டிசைன் டிசைனா பிராப்ளம்ஸ் வில் கம் அன்ட் கோ. கொஞ்சம் சில்  பண்ணும் ஹாப்பி. அவ்வளவுதான் மேட்டர்.

ஒவ்வொரு விழாவுக்கும் நான் ரொம்ப சுமாராக உடையணிந்து செல்வதாக சொன்ன என்  காஸ்ட்யூமர்தான் இந்த கோட் கொடுத்தாங்க. சரி, நானும் நண்பர் அஜித் மாதிரி கோட் போட்டுக்கொண்டு போவோம் என்று இங்கு வந்தேன். இப்போது இருக்கும் தளபதி விஜய், 20 வருடங்களுக்கு முன்பு இருந்த இளைய தளபதி விஜய்யிடம் சொல்ல விரும்புவது என்ன என்று கேட்கிறீர்கள்.

இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை பற்றி இளைய தளபதியிடம் கேட்பேன். அப்போது  ரெய்டு (வருமான வரி சோதனை)  எல்லாம் இல்லாமல் ரொம்ப அமைதியாக இருந்தேன். இப்போது ரெய்டு நடந்தாலும் கூட நிம்மதியாகத்தான் இருக்கிறேன். இவ்வாறு பேசிய விஜய், திடீரென்று மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து விஜய் சேதுபதிக்கு முத்தம் கொடுத்தார். அப்போது இருதரப்பு ரசிகர்களும் பலத்த ஆரவாரம் செய்தனர்

Tags : Vijay ,river ,Ajith ,
× RELATED ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர்...