×

ஓட்டல் தொழிலில் ஈடுபடும் நடிகை

இவன் தந்திரன், விக்ரம் வேதா, ரிச்சி படங்களில் நடித்த ஷ்ரத்தா ஸ்ரீநாத், கடந்த ஆண்டு அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது மாறா, சக்ரா என 2 படங்களில் நடித்து வருகிறார். சினிமாவிலிருந்து சில நடிகைகள் வெப் சீரிஸில் நடிக்கச் செல்கின்றனர், சிலர் தனது சம்பாத்தியத்தை வேறு தொழிலில் முதலீடு செய்கின்றனர்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங் உடற்பயிற்சி கூடங்கள் திறந்து நடத்தி வருகிறார். அந்த வரிசையில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் தற்போது சென்னையில் சொந்தமாக ஓட்டல் திறந்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ’இது பெரிய ரெஸ்டாரன்ட்டைவிட கொஞ்சம் சிறியது, காபி ஷாப்பைவிட கொஞ்சம் பெரியது. சுவையான உணவு வகைகள் எளிமையாகவும், ஃபிரஷ்ஷாகவும் தரும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. நான் என்றுமே சுத்தம், சுகாதாரத்தை அதிகம் பார்ப்பேன். உணவு விஷயத்திலும் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதில் ஒருபடி முன்னதாக இருப்பேன்’ என்றார்.

Tags : Actress ,hotel industry ,
× RELATED 2 மாதமாக அபுதாபியில் தவிக்கும் நடிகை