×

விஜய் தேவரகொண்டாவுடன் நடிப்பாரா மைக் டைசன்?

தமிழில் நோட்டா படத்தில் நடித்தவர் விஜய் தேவரகொண்டா. தெலுங்கில் பல படங்களில் நடித்துள்ள அவர், அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை தயாரித்து இயக்குகிறார் புரி ஜெகன்னாத். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இந்த படத்தை புரி ஜெகன்னாத்துடன் இணைந்து அவரது காதலியும் நடிகையுமான சார்மியும் தயாரிக்கிறார்.

இதில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசனை அணுக புரி ஜெகன்னாத் விரும்பினார். ஆனால் அது முடியவில்லை. இந்நிலையில் இந்தியில் இந்த படத்தை வெளியிடும் உரிமையை தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் ஜோஹர் வாங்கியுள்ளார். இப்போது அவர் மூலமாக மைக் டைசனை தொடர்பு கொள்ள படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்கான முயற்சிகளில் கரண் ஜோஹர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Mike Tyson ,Vijay Deverakonda ,
× RELATED உதவி செய்வதை விமர்சனம் செய்வதா?...விஜய் தேவரகொண்டா ஆவேசம்