×

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 307 ரன்கள் வெற்றி இலக்கு

ஆக்லாந்து : நியூசிலாந்தில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய  அணி வென்றது. இந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற  நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் பந்துவீச முடிவு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 306 ரன்களை எடுத்து. இந்திய அணியின் துவக்க வீரர்கள் தவான், கில் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தவான் 77 பந்துகளில் 72 ரன்களையும், கில் 65 பந்துகளில் 50 ரன்களையும்எடுத்தனர். ஷ்ரேயஸ் ஐயர் சிறப்பாக விளையாடி 76 பந்துகளில் ரன்களையும், சஞ்சு சாம்சன் 38 பந்துகளில் 36 ஆண்களையும் எடுத்தனர்.வாஷிங்டன் சுந்தர் இறுதியில் அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 37 ரன்களை எடுத்தார், இதில் 3 சிக்ஸர்களும், 3 பௌண்டரிகளும் அடங்கும்.  நியூசிலாந்து அணி சார்பில் சௌதீ, பெர்குசன் தலா   3 விக்கெட்களை வீழ்த்தினார். 307 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது….

The post இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு 307 ரன்கள் வெற்றி இலக்கு appeared first on Dinakaran.

Tags : New Zealand ,India ,Auckland ,T20 ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை