×

தனுஷ் படத்துக்கு மலையாள கதாசிரியர்கள்

துருவங்கள் பதினாறு படத்துக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கிய மாபியா படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இந்த படத்துக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இது பற்றி கார்த்திக் நரேன் கூறும்போது, விமர்சனங்கள் பலவிதமாக இருந்தாலும் அதை வரவேற்கிறேன். இதன் மூலம் படத்தின் தன்மையை அறிந்துகொள்ள முடியும் என்றார். அவர் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளார்.

மாபியா படத்தின் ரிசல்ட்டை தொடர்ந்து, இதில் தனியாக கதை எழுதாமல் மலையாள திரைப்பட கதாசிரியர்களுடன் சேர்ந்து கதை, திரைக்கதை எழுத கார்த்திக் நரேன் முடிவு செய்திருக்கிறார். மலையாளத்தில் வரதன், வைரஸ் ஆகிய படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதியவர்கள் ஷர்ஃபு, சுஹாஸ். இவர்கள் இருவரையும் தனது படத்தில் ஸ்கிரிப்ட் எழுத ஒப்பந்தம் செய்திருக்கிறார் கார்த்திக் நரேன். மே மாதம் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

Tags : Dhanush ,Malayalam Writers ,
× RELATED தனுஷுக்கு எதிரான மனு தள்ளுபடி