×

ஜிப்ஸியில் நீக்கப்பட்ட காட்சிகள் யூ டியூப்பில் வெளியாகிறது

ஜீவா, நதாஷா சிங் நடித்துள்ள படம் ஜிப்சி. இந்த படத்தை ராஜு முருகன் இயக்கியுள்ளார். மத கலவரத்தின் பின்னணியில் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தை பார்த்த சென்சார் போர்டு, படத்துக்கு சான்றிதழ் வழங்க மறுத்தது. மறு தணிக்கை குழுவுக்கு சென்ற பிறகும் ஏகப்பட்ட கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. குறிப்பிட்ட பல காட்சிகளை வசனங்களை நீக்க உத்தரவிட்டனர். அப்போதுதான் படத்துக்கு சான்றிதழ் தரப்படும் என எச்சரித்தனர்.

இதையடுத்து வேறு வழியின்றி அந்த காட்சிகளை நீக்கவும் வசனங்களை நீக்கவும் படக்குழு சம்மதித்தது. அதன் பிறகே படம் திரைக்கு வந்தது. இந்நிலையில் நீக்கப்பட்ட காட்சிகளை யுடியூப்பில் வெளியிட இயக்குனர் ராஜு முருகன் முடிவு செய்துள்ளார். சென்சாரால் வெட்டப்பட்ட அந்த சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்கள் அனைத்தும் இணையத்தில் வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Gypsy ,
× RELATED கணவன், மனைவி ஈகோ கதையில் அஞ்சலி நாயர்