×

காஜல் அகர்வால் கலர்புல் கொண்டாட்டம்

நடிகை காஜல் அகர்வால் கைவசம் படங்கள் அதிகம் இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களில் ஈடுபடுகிறார். ஹோலி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடினார். தனது தங்கை நிஷா அகர்வாலின் குழந்தை இஷான் வலேச்சாவை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு அவர் குடும்பத்தினர் மீது வண்ணங்கள் வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தனது அம்மா, அப்பா மற்றும் குடும்பத்தினருக்கு ஹோலி வாழ்த்து தெரிவித்தார். மேலும், ‘வண்ணங்கள் மட்டுமே அர்த்தங்கள் ஆகிவிடாது, இதயத்திலிருந்து பேச இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கு’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Tags : Kajal Agarwal Colorful Celebration ,
× RELATED கொள்ளையடிக்கும் மின்வாரியம்: நடிகர் பிரசன்னா தாக்கு